அந்த ஒரு நொடி..!!
அந்த ஒரு நொடி..!! இருண்ட வீதியில், சில்லென்ற தென்றலில், ஒலிர்ந்த நிலவொலியில், அடர்ந்த மர நிழலில், உன் கைகோர்த்து நடக்கும், அந்த ஒரு நொடி போதும் எனக்கு..!! அந்த ஒரு நொடி..!! பறந்த புல்வெளி, பனிபொழியும் வேளையில், மலர்சொறியும் காலையில், தேனொழுகும் இசையினை, உன் தோள்சாய்ந்து கேட்டிருக்கும் அந்த ஒரு நொடி போதும் எனக்கு..!! அந்த ஒரு நொடி..!! பகலவன் உதயத்தில், என் மன்னவன் மையத்தில், துயில் கலையும் நேரம், அவன் அசைவுகளை ரசிக்கும், அந்த ஒரு நொடி போதும் எனக்கு..!! அந்த ஒரு நொடி..!! வீதியெங்கும் விழாக்கோலம், வீடெங்கும் சொந்தங்களின் ராகம், பரபரக்கும் வேளையில், பளிச்சிடும் அவன் பார்வையும், பளிங்குப்பல் வாசீகரத்தையும், ஓரக்கண்ணால் ரசித்திடும், அந்த ஒரு நொடி பொதும் எனக்கு..!! அந்த ஒரு நொடி..!! பிள்ளைகள் இரண்டும் தொல்லை செய்ய, மறுநாள் பள்ளியை எண்ணி அவன் கவலை கொள்ள, ஒன்றை மடியிலும், மற்றொன்றை தோளிலும், உறங்க வைத்து, அவன் விழித்திருக்கும் அழகை காணும், அந்த ஒரு நொடி போதும் எனக்கு..!! அந்த ஒரு நொடி...