Posts

Showing posts from October, 2014

பிரியமான மது

நினைக்கவில்லை நான் - இங்கு வெகுவிரைவில் இயல்பு நிலைக்கு வருவேன் என்று..! இருக்கையில் இறுக்கமாய், இருவிழி அகல விழித்திருந்தேன். சிநேக குரல் ஒன்று, பெயர் சொல்லி விளித்தது..!! கண்டவுடன் தன்பால் இழுக்கும், மதுரமான கண்கள், நிறைந்த புன்சிரிப்பு, குழந்தை பேச்சு, திகட்டாத பாவனைகள்..!! சிறுபிள்ளை சேட்டை, சின்ன சின்ன குறும்புகள், கொஞ்சி பேசும் போது, கேட்டுக்கொண்டிருப்பதே குதூகலம்..!! பால்மணம் மாறா பைங்கிளி, எதிர்த்து பேசி அறியா பூங்கொடி, கனிவு பொங்கும் கண்மணி, இது (மது)வென்பதல்லவோ பொன்மொழி..!!