Posts

Showing posts from March, 2016

காதலுடன் ஒரு ஊடல்..!!

சிலமணித்துளி தான் இம்மௌனம், சிந்தும் கண்ணீரிலும் சலனம், சிந்திக்கும் நொடிகளில் மரணம், சந்தித்திட மனம் ஏங்கும்.!! சிறுதுளி மழையில் சேர்ந்து, சிறகடித்து பறந்தோம் நாமும், சிலிர்த்து எழுந்தது நாணம், சில்லாய் தெறித்தது மனமும்..!! சின்னதாய் தோன்றிடும் ஊடலும், சிறப்பாய் பெருகிடும் காதலும், சிணுங்கும் அத்தருணங்களும், சிந்தாது சேர்ந்திருக்கும் என்றும்..!!