கண்ணீரும் காதலும் ..!
சிதைந்தே போனாலும், சினமதை மறையாத, சிந்தையில் அழியாத, செறுக்குடை மாந்தருள், சேர்ந்ததொரு பெண்ணன்றோ! சத்தமாய் பேசிடினும், சாந்தம் தானிழந்து, சினந்தன் எல்லையறுத்து, சின்னதொரு பிழையினையும், சகிக்காத சகியன்றோ.! உன் சொந்தம் தானடைந்து, சிறுகோபம் துளிர்த்திடினும், சத்தமாய் நீ கூறும், சாத்தியமில்லா பொய்களும், உன் சிணுங்களில் மறைந்திடுமே.! சொல்லவரும் செய்திகளை, செவிகொடுத்துக் கேளாயோ, சித்தம் தெளிந்து பாராயோ, சுற்றம் மறந்து எனைநோக்கி, சுட்டிக்காட்டிட விழையாயோ.! செந்தழலாய் எரிந்தாய், சிலநேரம் சரிந்தாய், சொல்லியபின் யோசிப்பதேன், செய்தபின் யாசிப்பதேன், சொல்வாயோ செங்கதிரோனே.! சிறுபிள்ளை நீ எனக்கு, சத்தமின்றி அழுதாலும், சங்கீதமாய் சிரித்தாலும், சந்திப்பொன்றில் மறந்தேன், சண்டையிட நன் மறந்தேன்.! ஆடலும் ஊடலும், இன்பமும் துன்பமும், கண்மணியும் கண்ணீரும், தொல்லையும் செல்லமும், அண்டமும் ஆழ்கடலும்.! வாழ்வும் தாழ்வும், பிரிவும் சந்திப்பும், பலமும் பலவீனமும், ரசனையும் வெறுப்பும், காதலும் மோதலும்.! அனைத்துமாய் நின்றாய், அளவின்றி நோகடித்து, நின் நிழல் தாண்டி ஓட...