பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்
நேற்று வரை ராதிகா நாடகத்தை, எதற்காகவும் விட்டுக்கொடுக்காத என் தாய், தொலைக்காட்சி பெட்டி இருக்கின்ற ஒரே காரணத்திற்காக, சானல்களை ஓட விடும் தந்தை, அதிகாலை கல்லூரி பேருந்தை பிடிக்க, ஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லும் என் தங்கை, ஓயாமல் ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்புகளை, மட்டுமே காணும் என் மாமா என்று அனைவரும் இன்று பிக் பாஸ் பார்வையாளர்கள். அத்தகைய ஆளுமையை கொண்ட பிக் பாஸ் -ஐ தலைவணங்குகிறேன். மக்களின் மனதை படித்து, தன் பிடியில் தக்க வைக்க அறிந்தவன் எவனாயினும் அவன் பாராட்டுக்குரியவனே. பிக் பாஸ், இது சித்திரக்கிப்பட்ட தொடர், சுத்திகரிக்கப்பட்ட உண்மை, ஏமாற்று யுக்தி, எழுதி வைத்து நடிப்பது, முட்டாள்தனம் என்று ஏகப்பட்ட கருத்துக்கள் உலா வரினும் இதை பார்க்கதவர் யாரும் இலர். முகநூல் தொடங்கி முட்டு சந்து வரை எங்கும் எதிலும் பிக் பாஸ். தெருவோர சிறார்கள் மட்டைப்பந்து குழு பிரிப்பது போல் ஆளுக்கொரு முகநூல் குழு அமைத்து விருப்புகளையும், வெறுப்புகளையும், அதிருப்திகளையும், ஆதரவுகளையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இ...