மழையில் ஒரு நாள்..!
சில்லென்ற காற்று - சன்னல் திரை தாண்டி வீச, காய்ந்து வறண்ட மண்ணோ, மழைகொண்டு மேனி பூச, மெத்தை சிறையில் நானோ, மண் மணந்தனில் திளைக்க.! குளிர்ந்த நீரதனில் உறைந்து, பூத்துவாளையில் உலர்ந்து, கலையா உறக்கமது கலைந்து, நில்லா மழைதனில் நடந்து, செல்லா தூரம் சென்றுவிட, துடித்திடுதே மணம் இன்று.! தொடர்வண்டி பயணமது, தொலைதூரம் தொடராதோ, தூறலின் சாரலது, தூரிகையில் தூவியதோ, ஓவியமாய், காவியமாய், நெஞ்சந்தனை நிறைகின்றதே.! கருத்த வானமும், கலையா கருமுகிலும், செழித்த பூமியும், சென்றிடா வெள்ளமும், திளைத்த நெஞ்சமும், திகட்டிடா இன்பமும், விழித்த குறும்பும், விம்மிய உணர்வும் - என்னை விளித்து, களித்து, மழைதனில் நனைத்ததே, உடலும், உள்ளமும் இணைந்து நிறைந்ததே ..!!