காதல்..!!
காதல் , கற்பனைக்கெட்டாத காரியங்களையும் , கண்முன் கொண்டு வரும் .! மழையில் மயக்கம் காண்கிறேன் , சுடர்விடும் சூரிய வெளிச்சத்திலும் , என் முகம் மலரக் காண்கிறேன் ..! பசிக்கும்போது தூக்கம் தேடுகிறேன் , விடியும் நேரம் இருள் தேடி அலைகிறேன் .! சூரியனையே எதிர்நோக்கும் என் விழிகள் நிலவொளி கண்டு கலங்கி நிற்கிறது ..! பயணங்கள் பதிவுகளாகிறது , பதிவுகள் அனைத்தும் அவனாகிறான் ..!! நெருங்கிய தோழிகள் அருகிலிருந்தும் அந்நியமாகிறார்கள் நான் நெருங்க நினைக்கும் அவனோ தொலைவில் இருந்தாலும் , அருகிலிருப்பதாய் உணருகிறேன் ..!! காதலிக்கிறேன் ..!! காலம் முழுதும் கனவுகள் தொடர , என் பாதை முழுதும் அவனைத் தொடர , வாழும் வரை ரசித்திருக்க , வீழும்போது அவன் மடியில் உயிர் துறக்க …!!!