காதல்..!!
காதல்,
கற்பனைக்கெட்டாத
காரியங்களையும்,
கண்முன்
கொண்டு வரும்.!
மழையில்
மயக்கம் காண்கிறேன்,
சுடர்விடும்
சூரிய வெளிச்சத்திலும்,
என்
முகம் மலரக் காண்கிறேன்..!
பசிக்கும்போது
தூக்கம் தேடுகிறேன்,
விடியும்
நேரம் இருள் தேடி அலைகிறேன்.!
சூரியனையே
எதிர்நோக்கும்
என் விழிகள்
நிலவொளி
கண்டு கலங்கி நிற்கிறது..!
பயணங்கள்
பதிவுகளாகிறது,
பதிவுகள்
அனைத்தும்
அவனாகிறான்..!!
நெருங்கிய
தோழிகள் அருகிலிருந்தும் அந்நியமாகிறார்கள்
நான்
நெருங்க நினைக்கும் அவனோ
தொலைவில்
இருந்தாலும்,
அருகிலிருப்பதாய்
உணருகிறேன்..!!
காதலிக்கிறேன்..!!
காலம்
முழுதும் கனவுகள் தொடர,
என்
பாதை முழுதும் அவனைத் தொடர,
வாழும்
வரை ரசித்திருக்க,
வீழும்போது
அவன் மடியில் உயிர் துறக்க…!!!
Chance less Arthi!!!!
ReplyDelete