இன்று ஒரு இரவு.!

இன்று ஒரு இரவு

சித்திரமாய் நீ சிரித்திருக்க அந்த சந்திரனும் சற்று மங்கித்தான் தெரிகிறதோ ?

ஒரு நீண்ட பயணம், தனித்திருக்கவில்லை,

அதிகம் பேசிக்கொள்ளவில்லை,

என் முன் அமர்ந்திருக்கிறாய் ஆதலால் கண்களும் கதைக்கவில்லை, எனினும் ஏதோ ஒரு நெருக்கம் உணர்கிறேன்

அலைவரிசை பாடல் அனைத்திலும் நம்மை பொருத்தி சிரித்துக் கொண்டிருக்கிறேன்!

நான் மட்டுமே அறிந்துகொள்ளும் உன் வியர்வை வாசம் இந்த ஜன்னல் காற்றை தாண்டி வீசுகிறது, கிறங்குகிறேன் !

நமக்கான உரையாடல்களை நானே எனக்குள் பேசிக்கொள்கிறேன்.!

உன் நரைமுடி ,

சற்றே சரிந்த இடுப்பு சதை,

திருத்தாத தாடி, 

காதோரம் அழுந்திய கண்ணாடி அச்சின் மீதெல்லாம் 

புதுக்காதல் பூக்கிறது.!

எனக்கு நீ புதிதாய் தெரிகிறாய்,

நானே எனக்கு புதிதாகிறேன்.!

காதல் காலம் செல்ல செல்ல அழகாகிறது,

உன்னுடன் அர்த்தமாகிறது ❤️

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!