அறிமுகம்...!!
வாழ்க்கை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், நமக்கு ஏதேனும் ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
தொழில்நுட்பம், இயந்திரம் போன்ற விலைபொருட்கள் தொடங்கி, மனிதர்கள், உணர்வுகள், இழப்புகள், வெற்றி, தோல்வி, உறவுகள் போன்ற விலைமதிப்பில்லா மெல்லிய விடையங்கள் வரை. வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் அறிமுகமே.
முதல் அனுபவம் கூட அறிமுகம் தான்.
பிறந்த குழந்தைக்கு அழுகை அறிமுகம், அந்த அழுகையின் ஊடே தாய்க்கு தன் பிள்ளையின் பசி அறிமுகம்.
இப்படி அறிமுகம் பலவிதம். என் வாழ்வில் எனக்கு அறிமுகமானவைகளில் சில முக்கிய அறிமுகங்கள்...!!
நான் கருவில் உதித்த நொடி, நான் யாரென்று அறியாமலே எனக்காக பல இன்னல்கள் தாங்கிய என் தந்தை, தாயல்லவோ என் முதல் இனிய அறிமுகம்.
இவ்வுலகில் பிறந்த கணம் என் தாயின் தொப்புள் கொடி வழியே சுவாசித்து பழகிய எனக்கு என் நாசி வழி சுவாசிக்க அறிமுகம். என்னை அழவைத்தது மட்டுமன்றி என்னை பெற்றவளையும் துடிக்க வைத்தது.
முதல் முத்தம், என்னை முதல் பார்வையில் ரசித்த, விரும்பிய என் பெற்றோரின் பாசம் அறிமுகம்.
முதல் வாய் சோறு, என் தாயின் இரத்தத்தையே உறிஞ்சு பழகிய எனக்கு என் இரத்தத்தை நானே உற்பத்தி செய்திட அறிமுகம்.
முதல் தவழலில், என் தாயின் பதற்றம் அறிமுகம்.
முதல் அடி நடையில், தூரம் அறிமுகம்.
முதல் பிறந்தநாள், என் வாழ்க்கை காலம் முடிவை நோக்கி நகருவதற்கான அறிமுகம்.
முதல் நாள் பள்ளி - வெறுப்பின் அறிமுகம், முதல் தோழியின் அறிமுகம், என் இரண்டாம் வீட்டின் நுழைவிடம்.
முதல் பரிட்ச்சை, வெற்றி - தோல்வியின் அறிமுகம்.
தங்கை பிறந்த முதல் நாள் - தனிமை அறிமுகம். அவள் வளர்ந்த ஒவ்வொரு நாளும் இனிய நினைவுகள் அறிமுகம்.
கல்லூரி முதல் நாள் - பிரிவு, பசி, சோர்ந்து விழும் தாயின் மடி, கட்டி தவழும் தந்தையின் நெருக்கம், தினந்தோறும் சண்டையிட்டாலும் நானின்றி உண்டு, உறங்கி பழகிடாத என் தங்கையின் நேசம் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் விடுதி வாழ்க்கை அறிமுகம்.
முதல் காதல்
என் அறிமுகங்கள் அனைத்தும் அர்த்தமற்று போனது.
அன்று அவன் அளவாய் தெரிந்தான். அந்த காலை சூரிய ஒளி அவன் வியர்வைத் துளிகள் பட்டு பிரகாசித்து கொண்டிருந்தது. அவன் முதல் பார்வை அறிமுகம்.
முதல் முறையாக அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாத பதற்றம் அறிமுகம்.
அவனுடனான என் முதல் அறிமுகம், என்னை நானே அறிமுகம் கண்டேன்.
முதல் முறையாக நள்ளிரவு மொட்டை மாடி அரட்டை அறிமுகம். எனக்கு இணையான தோழனின் நேசம் அறிமுகம்.
முதல் பிரிவு - என்னுள் இருந்த காதல் அறிமுகம்.
அவனுடன் நான் மட்டும் கண்ட கனவுகள் அறிமுகம். அவனில்லாமல் நான் உணர்ந்த ஏக்கம் அறிமுகம்.
முதல் தீண்டல் - என்னுள் இருந்த வெட்கம் அறிமுகம்.
முதல் காதல் வெளிப்பாடு - இருவருக்குமான ஒரு அழகிய உலகின் அறிமுகம்.
முதல் முத்தம் - என் பெண்மை எனக்கே அறிமுகம்.
ஒவ்வொரு நாளும் அவன் எனக்கு அறிமுகமாகிறான்
என் பசியில் வாடும் தாயாய்,
என் தோல்வியில் உருகும் தந்தையாய்,
என்னுடன் சண்டையிடும் தங்கையாய்,
எனக்காக வாதிடும் தோழனாய்,
பிரிவில் ஏங்கும் காதலனாய்,
நெருங்கி பழகும் கணவனாய்..!!
உன் அறிமுகம் அறிமுகபடுத்தும் அனைத்தும் சிறந்ததோர் அனுபவமே :)
இன்றும்
என்றும்
என்றென்றும்
என் சிறந்த அறிமுகம் அவனல்லவோ..!!

So toucing. Keep rocking :)
ReplyDeleteHappy that my words touched you :)
Deletegood one.... resize the images when you add it in the blog... it distracts the flow... :)
ReplyDeleteAzhagu varigal!!!!
ReplyDelete