Posts

Showing posts from July, 2014

அறிமுகம்...!!

வாழ்க்கை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், நமக்கு ஏதேனும் ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.  தொழில்நுட்பம், இயந்திரம் போன்ற விலைபொருட்கள் தொடங்கி, மனிதர்கள், உணர்வுகள், இழப்புகள், வெற்றி, தோல்வி, உறவுகள் போன்ற விலைமதிப்பில்லா மெல்லிய விடையங்கள் வரை. வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் அறிமுகமே. முதல் அனுபவம் கூட அறிமுகம் தான். பிறந்த குழந்தைக்கு அழுகை அறிமுகம், அந்த அழுகையின் ஊடே தாய்க்கு தன் பிள்ளையின் பசி அறிமுகம். இப்படி அறிமுகம் பலவிதம். என் வாழ்வில் எனக்கு அறிமுகமானவைகளில் சில முக்கிய அறிமுகங்கள்...!! நான் கருவில் உதித்த நொடி, நான் யாரென்று அறியாமலே எனக்காக பல இன்னல்கள் தாங்கிய என் தந்தை,  தாயல்லவோ என் முதல் இனிய அறிமுகம். இவ்வுலகில் பிறந்த கணம் என் தாயின் தொப்புள் கொடி  வழியே சுவாசித்து பழகிய எனக்கு என் நாசி வழி சுவாசிக்க அறிமுகம். என்னை அழவைத்தது மட்டுமன்றி என்னை பெற்றவளையும் துடிக்க வைத்தது. முதல் முத்தம், என்னை முதல் பார்வையில் ரசித்த, விரும்பிய என் பெற்றோரின் பாசம் அறிமுகம். முதல்  வாய் சோறு, என் தாயின் இரத்தத்தையே உறி...