தயங்கி நின்ற நிமிடங்கள்
யாருமில்லா தேசத்தில் , அந்தி சாயும் நேரத்தில் , வாசமுள்ள மலரின் மேல் , வாசம் செய்ய ஆசைதான் ..!! எனதருகில் நீயிருக்க , உனதருகில் நானிருக்க , வான்திறந்து மழைதெறிக்க , சேர்ந்திருப்போம் அனுபவிக்க ..!! பால்நிலா படம்பிடிக்க , வெட்கங்கொண்டு நான் ஒதுங்க , ஆசைக்கொண்டு நான் நெருங்க , களித்திருப்போம் அந்நடுநிசியில் ..!! மூன்றாம் ஜாமத்தில் , திண்ணையின் ஓரத்தில் , அணைத்த கையோடு , அளவெடுப்போம் வானத்தை ..!! பரந்த மனதோடு , பிறந்த கனவோடு , தெரிந்த வித்தைகளை , திருந்தப் பழகுவோம் ..!! என் துணையாய் நீ உன் சுனையாய் நான் , பருகிக் களைத்தப் பின்னும் , விலகாமல் இணைந்திருப்போம் ..!! நானறிந்த வித்தைகளில் , நீயறிந்த யுக்திகளை , அளவோடு பயன்படுத்தி , அளவின்றி அனுபவிப்போம் ..!! பொழுது புலர்ந்தாலும் , உலர்ந்திராத என் இதழ்கள் , தயங்கிடாமல் கூரிடும் , நான் தயங்கி நின்ற நிமிடங்களை ..!!