தயங்கி நின்ற நிமிடங்கள்
யாருமில்லா தேசத்தில்,
அந்தி சாயும்
நேரத்தில்,
வாசமுள்ள மலரின்
மேல்,
வாசம் செய்ய
ஆசைதான்..!!
எனதருகில் நீயிருக்க,
உனதருகில் நானிருக்க,
வான்திறந்து மழைதெறிக்க,
சேர்ந்திருப்போம் அனுபவிக்க..!!
பால்நிலா படம்பிடிக்க,
வெட்கங்கொண்டு நான்
ஒதுங்க,
ஆசைக்கொண்டு நான்
நெருங்க,
களித்திருப்போம் அந்நடுநிசியில்..!!
மூன்றாம் ஜாமத்தில்,
திண்ணையின் ஓரத்தில்,
அணைத்த கையோடு,
அளவெடுப்போம் வானத்தை..!!
பரந்த மனதோடு,
பிறந்த கனவோடு,
தெரிந்த வித்தைகளை,
திருந்தப் பழகுவோம்..!!
என் துணையாய் நீ
உன் சுனையாய் நான்,
பருகிக் களைத்தப் பின்னும்,
விலகாமல் இணைந்திருப்போம்..!!
நானறிந்த வித்தைகளில்,
நீயறிந்த யுக்திகளை,
அளவோடு பயன்படுத்தி,
அளவின்றி அனுபவிப்போம்..!!
பொழுது புலர்ந்தாலும்,
உலர்ந்திராத என்
இதழ்கள்,
தயங்கிடாமல் கூரிடும்,
நான் தயங்கி
நின்ற நிமிடங்களை..!!
Comments
Post a Comment