திருமணம் எனும் மாயவளை ❤️
என்னதான் வருடங்கள் பல காதலில் திளைத்து, சிரிக்கப் பேசி, இனிக்க நாட்கள் கடத்தி, நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்த போதிலும், திருமணம் என்னவோ இரு புதிய, முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாகவே நம்மை மாற்றுகிறது..! காதலில் எதார்த்தங்கள் இருப்பினும் திருமணத்தின் இயற்கை தன்மைக்கு முன் அவை தூசியாகிப் போகின்றன...! அதை தொடாதே, இங்குத் துப்பாதே, உறக்கக் கத்தாதே என்று நித்தம் காதலில் கத்திக் கொண்டே இருப்பவர்கள் ஏனோ திருமணத்தின் பின் கதறலை விடுத்து "ஏனப்பா அதை பிடித்தாய்" என் சலித்து பின் துணையுடன் சேர்ந்து அதை ஏற்கவே பழகுகின்றனர்.. இதில் காதல் சற்று தாய்மையுடனே தலைதூக்குகிறது..! ஏதேனும் சாகசம் புரியலாமா எனக் கேட்ட காதல் "இந்த சாலை வழி வேண்டாமே" என தயங்கி நிற்கிறது இன்று...! இவை காதல் குறைச்சலோ, அல்ல வலிய தேடிய மாற்றமோ அல்ல. இங்கு காதல் மிகையடைந்தது வழிந்தோடுகிறது. இங்கு மாற்றத்தை யாரும் திணிப்பது இல்லை, மனம் முதிர்ச்சி அடைகிறது.. இங்கு சேட்டைகளுக்கு குறைவில்லை, குறும்பும் சிரிப்பும் மிகைந்தேயுள்ளது. இந்த மாற்றங்கள் மிகச் சாதாரணமாக இருவருக்கும் உரைக்காமல் வெகு இயல்பாக ...