திருமணம் எனும் மாயவளை ❤️

என்னதான் வருடங்கள் பல காதலில் திளைத்து,
சிரிக்கப் பேசி, இனிக்க நாட்கள் கடத்தி,
நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்த போதிலும்,
திருமணம் என்னவோ இரு புதிய,
முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாகவே நம்மை மாற்றுகிறது..!

காதலில் எதார்த்தங்கள் இருப்பினும்
திருமணத்தின் இயற்கை தன்மைக்கு முன் அவை தூசியாகிப் போகின்றன...!

அதை தொடாதே, இங்குத் துப்பாதே, உறக்கக் கத்தாதே என்று நித்தம் காதலில் கத்திக் கொண்டே இருப்பவர்கள்
ஏனோ திருமணத்தின் பின் கதறலை விடுத்து "ஏனப்பா அதை பிடித்தாய்" என் சலித்து பின் துணையுடன் சேர்ந்து அதை ஏற்கவே பழகுகின்றனர்..
இதில் காதல் சற்று தாய்மையுடனே தலைதூக்குகிறது..!
ஏதேனும் சாகசம் புரியலாமா எனக் கேட்ட காதல் "இந்த சாலை வழி வேண்டாமே" என தயங்கி நிற்கிறது இன்று...!

இவை காதல் குறைச்சலோ, அல்ல வலிய தேடிய மாற்றமோ அல்ல.
இங்கு காதல் மிகையடைந்தது வழிந்தோடுகிறது.
இங்கு மாற்றத்தை யாரும் திணிப்பது இல்லை,
மனம் முதிர்ச்சி அடைகிறது..
இங்கு சேட்டைகளுக்கு குறைவில்லை,
குறும்பும் சிரிப்பும் மிகைந்தேயுள்ளது.

இந்த மாற்றங்கள் மிகச் சாதாரணமாக இருவருக்கும் உரைக்காமல் வெகு இயல்பாக நிகழ்கிறது.
ஏனோ வெறுப்புகளும் விருப்பங்களாய் மாற்றமடைகிறது.

ஒப்பனைகள் அனைத்தும் அவன் ஒருவனுகென்றாகிறது!

அவன் வீட்டிற்கு வரும் நேரம் கண்டதும் ஏனோ ஒருமுறைக்கு பலமுறை கண்ணாடி பார்க்கும் ஆவலை அடக்கத்தான் எத்துனை போராட்டம்.

ஏற்கனவே புருவமத்தியில் அழுத்தமாய் இருக்கும் அந்த நெற்றிபொட்டை, சற்று சாய்வாய் உள்ளதோ என எடுத்து அதே இடத்தில் மீண்டும் அழுந்த ஒற்றி கண்ணாடி பார்த்து "இது சரி" என் சொல்லும்போது, "அட முட்டாளே, அது முன்பே அங்குதானே இருந்தது" என அறிவு ஒருபோதும் உறக்க ஒலிக்காது.

அந்த சிறு பதட்டத்தில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்கிறது.

காலையில் பார்த்துச் சென்ற அதே உடையில் இருந்தாலும் "என்னடி கண்மணி அழகு சற்று தூக்கலாய் உள்ளது" என் அவன் கண்ணடித்து சிரிக்கையில் இதழோரப் புன்னகை இதைத்தானே எதிர்பார்த்தேன் என்பதுபோல் வளைத்துக் காட்டிக்கோடுக்கும் நொடி, மனம் தன்வசம் இருப்பதில்லை..!

இங்கு காதல் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சூழலிலும் அவன் மீதான காதல் இன்னுமின்னும் தீர்க்கமாய், ஆழமாய் மிகையடைகிறது. ஊடலிலும் காதல் நிரம்பி வழிகிறது.!

இதற்கொன்றும் குறையில்லை என சலிக்கும் குரலுக்கும், சட்டைக் காலரை அழுந்த பற்றும் கைகளுக்கு இடையிலும் தான் எத்துனை முரண்.
காரணமில்லாச் சண்டைகள் காமத்தில் முடிதலை ஊடலெனக் கொள்க ❤️

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!