Posts

Showing posts from August, 2019

நான்..!

நீ மாறிவிட்டாய், நீ முன்பு போல் இல்லை என்று சொல்லும் உறவுகளுக்கு எப்படி புரியவைப்பேன், நான் இப்படியென்ற வரைமுறைக்கு அப்பாற்பட்டவள் என்று... காலத்திற்கும், சூழலுக்கும், என் மனவோட்டதிற்கும் ஏற்றார் போல் நான் தோழியாகவோ, திமிற் பிடித்தவளாகவோ, கர்வம் மிக்கவளாகவோ, கதறி அழுதபடி ஆறுதல் தேடும் மழலையாகவோ பிரதிபலிக்கின்றேன்.. இவை அனைத்தும் என்னுடையதே ... ஆனால் இவை மட்டுமே நானா என்றால் இல்லை...! நான், எனக்கே புரியாத புதிர்... ஆராய்வதை விடுத்து எதார்த்தை  ஏற்றுகொள்வோர்க்கு மட்டுமே தேவதை ஆகிறேன்..!

காதல் செய்..!

கட்டுக்கடங்காமல் காதல் செய்.. இந்த நொடி பொழுதில் உன்னுடன் நான் இருக்கிறேன், உனக்காக நான் இருக்கிறேன், இங்கு இது தான் சரி தவறு என்று நான் எதையும் வரையறுக்கவில்லை, ஆழிச்சுழி ஆட்கொண்டவள் போல் உன்னுள் மூழ்கி தொலையவே அவா..! உன் அதுரம் சிந்தும் அமுதினை என் நாவினால் ருசிக்கவும், உன் காதல் களத்தின் காயங்களை இமைகளால் வருடவும் இதுவே தருணம்... விதிவிலக்கு மட்டுமே இங்கு விதி, காற்றாய், கடலாய், வானாய், விண்மீனாய் எல்லையின்றி காதல் செய்... கட்டுப்பாடின்றி ஆதி மனிதன் போல் காமத்தின் வழி காதல் செய்..!