நான்..!

நீ மாறிவிட்டாய், நீ முன்பு போல் இல்லை என்று சொல்லும் உறவுகளுக்கு எப்படி புரியவைப்பேன், நான் இப்படியென்ற வரைமுறைக்கு அப்பாற்பட்டவள் என்று...

காலத்திற்கும், சூழலுக்கும், என் மனவோட்டதிற்கும் ஏற்றார் போல் நான் தோழியாகவோ, திமிற் பிடித்தவளாகவோ, கர்வம் மிக்கவளாகவோ, கதறி அழுதபடி ஆறுதல் தேடும் மழலையாகவோ பிரதிபலிக்கின்றேன்..

இவை அனைத்தும் என்னுடையதே ... ஆனால் இவை மட்டுமே நானா என்றால் இல்லை...!

நான், எனக்கே புரியாத புதிர்...

ஆராய்வதை விடுத்து எதார்த்தை  ஏற்றுகொள்வோர்க்கு மட்டுமே தேவதை ஆகிறேன்..!


Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!