அடங்கினேன்..!!
சிந்தும் மழைச்சாரலில்,
சிலிர்க்க வைக்கும் மலையடிவாரத்தில்
கொஞ்சும் குயிலோசை அடங்க,
அஞ்சும் அவள்
கன்னமருகே,
மிஞ்சும் ஆடவன்
நெருங்கி செல்ல,
அடக்க முடியா
ஆசைகளை,
அவிழ்த்துவிடும் நேரமிது..!!!
அணைக்க வரும்
அவன் ஆசைக் கைகளை,
அடக்கி ஆளும்
மந்திரத்தை,
அவளையன்றி யாரும்
அறியார்..!!
தெறிக்கும் மழைத்
தூரலில்,
வெறிக்கும் அவன்
கண்கள்,
சிலிர்க்கும் அவள்
இடையை,
தீண்டாமல் தீண்டிச் சென்றது..!!
மழையின் குளிரைக் காட்டிலும்,
அவள் விழியின் வெப்பம்,
அவனை உஷ்ணத்தில் உறைய செய்தது..!!
பாறை இடையே
பளிங்கு மாதுவின்,
பண்பட்ட பாகங்கள் படபடக்கும் நேரமிது..!!
மலையின் எழிலை
காட்டிலும்
வனப்புடன் தெரிந்தது
கன்னி கொண்ட
கவிதைகள்..!!
காணக் கண்கோடி
வேண்டுமென்று
இமைக்காமல் பார்த்திருந்த காதலன் கண்களில்,
கவிதைகள் மட்டுமல்ல
– அது
வெம்பி எழும்
அழகும் தெரிந்த்து..!!
விரசமதில் விஞ்ஞானம்,
விளங்கக் கண்டேன்
உன்னித்தில்..!!
பத்து நிமிடம்
பொறுக்காமல்
என்னை பத்துத்
திங்கள் பட்டினி போட்டாய்
பொத்தி வைத்த
ஆசைகளை – நீ
என் மீது
பொங்கச் செய்தாய்..!!
நீ ஆள
அடங்கினேன்….. நான்..!!
Comments
Post a Comment