Sunday, October 6, 2019

அசுரன் ❤️❤️❤️

மானம் மரியாதைக்காக கொலை பண்ணோம்-நு கௌரவமா சொல்ல மாட்டாங்க இல்லையா மச்சா? என தொடங்கி எத வேணாலும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கலாம் படிப்ப தவிர, ஒரே மொழி பேசுகிறோம் ஒரே நாட்ல வாழ்றோம் இது போதாதா ஒண்ணு சேர எனும் கடைசி வரி வரை ஒவ்வொரு வசனத்திலும் அத்தனை அர்த்தம் இயல்பாய் ஒன்றி வருவது பாராட்டுக்குரியது...

தனுஷ் நடிக்கவில்லை,  தன் பிள்ளைக்காக ஊரான் காலில் விழுவதாய் இருந்தாலும் சரி, தொட்டவன் உயிரை எடுப்பதாய் இருந்தாலும் சரி ஒரு அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்...

அவன் முன்னாடி அழல மாமா, ஆனா ரொம்ப வலிக்குது மாமா, அடிய விட அங்க இருந்த யாரும் ஒரு கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தது...! என்று மாரியம்மா பேசும் வசனம் நம்மை சுற்றி நடக்கும் தீண்டாமையும், அநியாயங்களையும் தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கும் நம் அனைவருக்கும் செருப்படி..!

படத்தில் பார்க்கவே இப்படி இருக்கே இதை தினம் அனுபவிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்..  தன் குடும்பத்திற்காக தன் அசூரத்தனம் அனைத்தையும் அடக்கி ஆளும் அப்பாக்கள் இங்கு எராளம்..!

அசுரன்... நமக்குள் புதைந்திருப்பவனை திரையில் பார்த்த திருப்தி ❤️

#ஆர்த்தி #கிறுக்கல்

No comments:

Post a Comment