வின்காலை கதிரவன் மறைந்ததும், இரவு தேவதை வருமுன், வானம் எனும் கொடியில், வெள்ளை நிற பூக்களை, அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர் தோன்றி, பின்பு கொடி முழுதும் படரும், விண்மீன் கூட்டமே .....
மழை .... மண்ணின் காதல் , உயிரின் தேடல் , அன்பின் உறைவிடம் , பண்பின் பிறப்பிடம்..... மின்னல் வெட்டி அடிக்க , வானம் மத்தளம் கொட்ட , மயில்கள் நாட்டியம் ஆட , கானப் பறவைகள் கீதம் பாட , முல்லை மலர்கள் தோரணமாக , மூங்கில் மரங்கள் வீணை மீட்ட , மண்ணை மணக்க வரும் மணமகன் , ...