Posts

Showing posts from May, 2012

V FOR VENDETTA - ஒரு விமர்சனம்

Image
 மனிதன் மறக்கப்படலாம் ஆனால் அவனது யோசனைகள் மறக்கப்படுவதில்லை. இதனை கருவாய் கொண்டு இயக்கப்பட்ட ஒரு படம். 400 வருடங்களுக்கு முன்னால் ஒருவனுக்கு தோன்றிய யோசனை சரியாக திட்டமிடப்படாததால் தோல்வியை தழுவியது. அதனை நம் கதாநாயகன் எவ்வாறு திறம்பட செயல்படுத்துகிறார் என்பது தன் திரைக்கதை. ஊரடங்குச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஒரு நகரத்தில் காவலர்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணைக் காப்பற்றுபாவனாக நாயகன் அறிமுகமாகிறான். முகமூடி அணிந்த நாயகம் படத்தின் இறுதி வரை முகமூடியை விளக்கவில்லை. முகமூடி முகத்திற்கு மட்டுமே தவிர அவனது எண்ணங்களுக்கோ, செயல்களுக்கோ அல்ல. அவனது முதல் அறிமுகமே அவனை ஒரு தீவிரவாதியாய் சித்தரிக்கின்றது. அதன்பின் அந்நகரத்தின் தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றி அதன்மூலம் தன் திட்டத்தை ஊருக்கு அறிவிக்கிறான். நவம்பர் 5 என்ற நாளையொட்டி கதை நகர்கிறது. அன்றைய நாள் நாட்டின் சட்டமன்றம் தகர்க்கப்படும் என்ற செய்தியை அறிவிக்கிறான். பின், அவனது பழித் தீர்க்கும் படலம் ஆரம்பிக்கின்றது. நாட்டின் முன்னணி தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். அதன் பின்னணியை ஆராயும்போது பல திடுக்கிடும் தகவ...

"THRIVE" ஆவணப்படம் - ஒரு விமர்சனம் !!!

Image
பணம் பத்தும் செய்யும்!!! அனைவரும் அறிந்த பழமொழி. ஆனால் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத சிலவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது!! இது வேறொங்கோ அல்ல நம் அன்றாட வாழ்கையில் நம்மை கசக்கி பிழிந்துக் கொண்டிருக்கின்றது! இவற்றை பற்றி தெள்ள தெளிவாய் உணர்த்தும் ஒரு ஆவணப் படம் தான் THRIVE ! சினிமா படங்களையே முழுதாய் பார்க்க முடியாமல் அரங்கை விட்டு வெளியேறும் இக்காலக்கட்டத்தில் இப்படம் இரண்டு மணி நேரம் என்னை ஒரே இடத்தில் கட்டிப் போட்டது. ஒரு சாதாரண நடுத்தர வர்கத்து மனிதன் (நாம்) எவ்வாறு பணக்கார வர்க்கத்துக்கும, அதிகார வர்க்கத்திற்கும் இரையாக்கப்படுகிறான் என்பதை தெள்ளத் தெளிவாய் ஆவணங்களுடன் விளக்கியிருக்கின்றார் இப்படத்தை இயக்கிய FOREST GAMBLE. பலக் கொடிய நோய்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளும், மருத்துவ முறைகளும் பணத்திற்காக மறைக்கப்பட்ட அவலம்! மருத்துவக் கல்லூரிக்கு sponsor அளிப்பது பால் பண்ணை வியாபாரிகளும் மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்களும்! என்ன விந்தைமிகு உலகமிது? கார்பரேட் உரிமையாளர்களும், தனியார் வங்கி உரிமையாளர்களும் நாட்டை ஆளும் தலைவர்களையே ஆளும் நிலை! அவர்கள் சொல...

ஈழம்!!!

Image
மண்ணின் வடிவம் நீர்த்துளி எனினும், சிந்தித் தீர்ப்பது இரத்தத் துளிகள்! இயற்க்கை எழில் கொழித்துள்ள போதும், மண் செழித்திருப்பது மனிதனின் இரத்தத்தால்!! காந்தி மகான் அஹிம்சை போராளி! ஆம், ஆங்கிலேயன் மனிதன், உணர்வுக்கில்லை எனினும், உயிருக்கு மதிப்பளித்தான்!! எனவே தான் சுதந்திரம் அளித்தான்!! இங்கு, ஆயுதங்களைத் துறந்து, சரணடைந்தவர்களை, சமாதியாக்கிவிட்டனரே? தமிழன் என்று சொல்லிக்கொள்ள, தகுதியை இருந்த ஓரினம், இன்றுத் தாரைத் தாரையாய், செத்து மடிந்துவிட்டதே!! கண்களில் கனவுகளோடும், நெஞ்சில் லட்சியங்களோடும் இருந்த பிஞ்சுகள், இன்று சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் அவலம்!! உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, என் தங்கம(க்)கள், தமிழ்ம(க்)கள், அல்லுறும் அவலம்!! சகோதரன் என்று தழுவியவனை, பதவிக்காக, பொருளுக்காக, காட்டிக் கொடுத்த அவலம்!! மகளின் பதவிக்காக டெல்லி பயணம், தமிழனின் உயிருக்கு டெலிபோன் மனு!! என்ன கொடுமை என் தமிழனுக்கு? ஆங்கிலேயன் ஆதரவளிக்கிறான், ஆதித்தமிழன் அடித்து அனுப்புகிறான்!! புதைக்கப்பட்டவை அனைத்தும், விதைக்கப்பட்டவை! என்றேனும் ஒரு நாள், என் தமிழன்...