ஈழம்!!!

மண்ணின் வடிவம் நீர்த்துளி எனினும்,
சிந்தித் தீர்ப்பது இரத்தத் துளிகள்!
இயற்க்கை எழில் கொழித்துள்ள போதும்,
மண் செழித்திருப்பது மனிதனின் இரத்தத்தால்!!

காந்தி மகான் அஹிம்சை போராளி!
ஆம்,
ஆங்கிலேயன் மனிதன்,
உணர்வுக்கில்லை எனினும்,
உயிருக்கு மதிப்பளித்தான்!!
எனவே தான் சுதந்திரம் அளித்தான்!!

இங்கு,
ஆயுதங்களைத் துறந்து,
சரணடைந்தவர்களை,
சமாதியாக்கிவிட்டனரே?

தமிழன் என்று சொல்லிக்கொள்ள,
தகுதியை இருந்த ஓரினம்,
இன்றுத் தாரைத் தாரையாய்,
செத்து மடிந்துவிட்டதே!!

கண்களில் கனவுகளோடும்,
நெஞ்சில் லட்சியங்களோடும் இருந்த பிஞ்சுகள்,
இன்று சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் அவலம்!!

உண்ண உணவின்றி,
உடுக்க உடையின்றி,
என் தங்கம(க்)கள், தமிழ்ம(க்)கள்,
அல்லுறும் அவலம்!!

சகோதரன் என்று தழுவியவனை,
பதவிக்காக, பொருளுக்காக,
காட்டிக் கொடுத்த அவலம்!!

மகளின் பதவிக்காக டெல்லி பயணம்,
தமிழனின் உயிருக்கு டெலிபோன் மனு!!

என்ன கொடுமை என் தமிழனுக்கு?
ஆங்கிலேயன் ஆதரவளிக்கிறான்,
ஆதித்தமிழன் அடித்து அனுப்புகிறான்!!

புதைக்கப்பட்டவை அனைத்தும்,
விதைக்கப்பட்டவை!
என்றேனும் ஒரு நாள்,
என் தமிழன்,
சுதந்திர சுவாசத்தை நுகர்வான்!
அந்நாளை,
உலக வரலாற்றில் எழுதுங்கள்!
விதைத்த உயிர்களின்,
வீரமிகு ஆட்சி இதுவென்று!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!