"THRIVE" ஆவணப்படம் - ஒரு விமர்சனம் !!!

பணம் பத்தும் செய்யும்!!!
அனைவரும் அறிந்த பழமொழி.
ஆனால் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத சிலவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது!!
இது வேறொங்கோ அல்ல நம் அன்றாட வாழ்கையில் நம்மை கசக்கி பிழிந்துக் கொண்டிருக்கின்றது!
இவற்றை பற்றி தெள்ள தெளிவாய் உணர்த்தும் ஒரு ஆவணப் படம் தான் THRIVE !

சினிமா படங்களையே முழுதாய் பார்க்க முடியாமல் அரங்கை விட்டு வெளியேறும் இக்காலக்கட்டத்தில் இப்படம் இரண்டு மணி நேரம் என்னை ஒரே இடத்தில் கட்டிப் போட்டது. ஒரு சாதாரண நடுத்தர வர்கத்து மனிதன் (நாம்) எவ்வாறு பணக்கார வர்க்கத்துக்கும, அதிகார வர்க்கத்திற்கும் இரையாக்கப்படுகிறான் என்பதை தெள்ளத் தெளிவாய் ஆவணங்களுடன் விளக்கியிருக்கின்றார் இப்படத்தை இயக்கிய FOREST GAMBLE.
பலக் கொடிய நோய்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளும், மருத்துவ முறைகளும் பணத்திற்காக மறைக்கப்பட்ட அவலம்!
மருத்துவக் கல்லூரிக்கு sponsor அளிப்பது பால் பண்ணை வியாபாரிகளும் மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்களும்!
என்ன விந்தைமிகு உலகமிது?



கார்பரேட் உரிமையாளர்களும், தனியார் வங்கி உரிமையாளர்களும் நாட்டை ஆளும் தலைவர்களையே ஆளும் நிலை! அவர்கள் சொல்வதைக் கேட்டால் பணம், புகழ், மரியாதை! இல்லையேல், அவர்கள் பெயர் பதித்த தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிகள் அவர்களின் நெஞ்சைக் கிழிக்கும்! மிஞ்சி போனால் தொண்டையை கிழிக்கும்!

எங்கே செல்கிறது உலகம்? எங்கே செல்கிறது மனிதம்?
பணம் படைத்தவன் சொல்கிறான், மக்களுக்கு உரிமை கிடைத்தால் அவர்களுக்கு அதை இவர்கள் (அதிகார வர்க்கத்தினர்) விரும்பும் வகையில் உபயோகிக்கத் தெரியாதாம். தன் தேவைக்கு அதிகமாய் பணம் இருந்தும் அதிகாரத்திற்காக மேலும் மேலும் பணம் சேர்த்து எதை சாதிக்கப் போகிறான்???

இவற்றுக்கான சான்றுகளையும் தீர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு பெட்டகம் தான் இந்த ஆவணப் படம்!
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய ஒரு படம்!
அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்! அதை மாற்ற முடியாது ஆனால் காலம் தாழ்த்தி நிகழ வைக்க நம்மால் முடியும்!
நாம் இன்றே விழித்தால்!

எனது முதல் விமர்சனம்!
சொல்ல வந்த கருத்துக்களை முழுமையாக சொல்லி விட்டேனா என தெரியவில்லை
ஆனால் இதை படிப்பவர் யாரேனும் இருவர் இதை பற்றி அறிய ஆவல் கொண்டால்!
அதுவே மனிதன் தன் அடுத்த நிலைக்கு செல்ல எடுத்து வைக்கும் முதல் படியை இருக்கும்!!

மேலும் விவரங்களுக்கு,
wwww.thrivemovement.com.




Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!