ஏனோ ஏனோ..?
நாட்கள் உருண்டோடினாலும் , நிமிடங்கள் மறைந்தோடினாலும் , நம் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள மட்டும் நாம் நேரம் ஒதுக்கும் விந்தை என்னவோ ..? ஆயிரம் சொந்தம் சூழ்ந்திருந்தாலும் , உன் சிறிய புன்னகை , என்னை அமைதியில் ஆழ்த்துவதேனோ ..? யாருமில்லா நேரத்திலும் , உன் ஓரவிழிப் பார்வை , கோடி சொந்தம் அருகிலிருக்கும் , ஆனந்தம் தருவதேனோ ..? உன் சுண்டுவிரல் சீண்டும் கணம் , உச்சிமுதல் பாதம் வரை , சிணுங்கி நிற்பதேனோ ..? யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்த நான் உன் ஒற்றை சொல்லில் அடங்கியதேனோ ..? வலி கொண்டு அழும்போதும் , சுகம் கண்டு மலரும் போதும் , மனம் உன்னை மட்டுமே தேடுவதேனோ ..? விடியல் கழிவது உன் நினைவில் , என் தூக்கம் கலைவது உன் கனவில் , வாழும் காலமெல்லாம் உனதருகில் , வீழும் காலம் விரைவில் இல்லையென்றாலும் , அதுவும் உன் மடியில் தான் ..!! என் விழிகளில் அரும்பும் நீர்த்துளிக் கூட , உன் செவிகளை எட்டும் அதிசயம் என்ன ..? நீ தூக்கத்தில் உளரும் வார்த்தைகள் கூட...