ஏனோ ஏனோ..?
நாட்கள் உருண்டோடினாலும்,
நிமிடங்கள் மறைந்தோடினாலும்,
நம் அன்றாட
நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள
மட்டும்
நாம் நேரம்
ஒதுக்கும் விந்தை என்னவோ..?
ஆயிரம் சொந்தம்
சூழ்ந்திருந்தாலும்,
உன் சிறிய
புன்னகை,
என்னை அமைதியில் ஆழ்த்துவதேனோ..?
யாருமில்லா நேரத்திலும்,
உன் ஓரவிழிப் பார்வை,
கோடி சொந்தம்
அருகிலிருக்கும்,
ஆனந்தம் தருவதேனோ..?
உன் சுண்டுவிரல் சீண்டும் கணம்,
உச்சிமுதல் பாதம்
வரை,
சிணுங்கி நிற்பதேனோ..?
யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்த
நான்
உன் ஒற்றை
சொல்லில் அடங்கியதேனோ..?
வலி கொண்டு
அழும்போதும்,
சுகம் கண்டு
மலரும் போதும்,
மனம் உன்னை
மட்டுமே தேடுவதேனோ..?
விடியல் கழிவது
உன் நினைவில்,
என் தூக்கம்
கலைவது உன் கனவில்,
வாழும் காலமெல்லாம் உனதருகில்,
வீழும் காலம்
விரைவில் இல்லையென்றாலும்,
அதுவும் உன்
மடியில் தான்..!!
என் விழிகளில் அரும்பும் நீர்த்துளிக் கூட,
உன் செவிகளை
எட்டும் அதிசயம் என்ன..?
நீ தூக்கத்தில் உளரும் வார்த்தைகள் கூட,
எனக்கு தெள்ளத்
தெளிவாய் புரிவது ஏனோ..?
நீ சிரிக்கும் கணம்,
நான் சிரிப்பதை மறந்து,
உன்னை இரசித்து நிற்பதேனோ..?
நான் இரசிப்பதற்காகவே
நீ காரணமின்றி சிரிப்பதேனோ..?
எண்ணம், சொல்,
செயல்
அனைத்தும் நீயான
பின்னும்,
என் மனம்,
அயராமல் உன்னை
தேடுவதேனோ..?
வீசும் வாடையிலும் புழுங்கி நிற்கிறேன்
உன் அணைப்பில்..!!
ஆழ்ந்த உறக்கத்திலும்,
உன் குரல்
கேட்டு குதித்தெழுகிறேன்..!!
முடிவு தெரிந்தும்
விடைபெற மறுக்கிறேன்..!
விடைபெறும் நொடியை,
நினைக்கக் கூட
வெறுக்கிறேன்..!!
விடைகள் தெரிந்தும்
வினவுவது ஏனோ..?
ஒருவேளை,
நாம் ஒருவரையொருவர்
காதலிப்பதால் தானோ ....?
Comments
Post a Comment