வெள்ளை கிள்ளை
வெள்ளை கிள்ளை வெள்ளை கிள்ளை பிள்ளை மனம் வெள்ளை கிள்ளை உறக்கத்தில் சிரித்தாய் புவி மறந்தேன் - உந்தன் புவி ஈர்ப்பு விசையில் எனை மறந்தேன் என் விரல் பிடிக்கும் உந்தன் கைகளுக்குள் -என்னை காலமெல்லாம் நீ சிறை பிடித்தாய். சிறை சென்ற நானும் திரும்பவில்லை உன் கைப்பிடி தளர்த்த விழையவில்லை..! வெள்ளை கிள்ளை வெள்ளை கிள்ளை தேன் சிட்டே நீ வெள்ளை கிள்ளை முதல் சிரிப்பில் எனை கவர்ந்துவிட்டாய் - உன் சிரிப்பினை ரசிக்கவே பணி அமர்த்திவிட்டாய் எனை பணியில் எனக்கொரு பிணியில்லை அன்பே நீ பிணைந்தில்லா நேரத்தில் பறக்குதடி மனமும் உனைத்தேடி பறக்குதடி வெள்ளை கிள்ளை வெள்ளை கிள்ளை என் முதல் மொட்டே நீ வெள்ளை கிள்ளை அர்ப்பணிப்பு : ஆராகுட்டிக்கு ஊக்கம் : நல்லை அல்லை