வெள்ளை கிள்ளை
வெள்ளை கிள்ளை
வெள்ளை கிள்ளை
பிள்ளை மனம்
வெள்ளை கிள்ளை
உறக்கத்தில் சிரித்தாய்
புவி மறந்தேன் - உந்தன்
புவி ஈர்ப்பு விசையில்
எனை மறந்தேன்
என் விரல் பிடிக்கும்
உந்தன் கைகளுக்குள் -என்னை
காலமெல்லாம் நீ
சிறை பிடித்தாய்.
சிறை சென்ற நானும் திரும்பவில்லை
உன் கைப்பிடி தளர்த்த விழையவில்லை..!
வெள்ளை கிள்ளை
வெள்ளை கிள்ளை
தேன் சிட்டே நீ
வெள்ளை கிள்ளை
முதல் சிரிப்பில் எனை
கவர்ந்துவிட்டாய் - உன்
சிரிப்பினை ரசிக்கவே
பணி அமர்த்திவிட்டாய் எனை
பணியில் எனக்கொரு
பிணியில்லை அன்பே நீ
பிணைந்தில்லா நேரத்தில்
பறக்குதடி மனமும்
உனைத்தேடி பறக்குதடி
வெள்ளை கிள்ளை
வெள்ளை கிள்ளை
என் முதல் மொட்டே நீ
வெள்ளை கிள்ளை
அர்ப்பணிப்பு : ஆராகுட்டிக்கு
ஊக்கம் : நல்லை அல்லை
Comments
Post a Comment