வாழ்வோம் வா ..!!

வாழ்ந்துதான் பார்ப்போமென, வாழத்தான் துவங்கினேன்;
வாழையடி வாழையாய், வாழ்ந்தோர் பலர் வரலாற்றில்;
வாழ்வதனில் வீழ்ந்தும், வாழ்ந்தோர் வாழ்ந்தரே - மக்கள் மனதில்;
வாழ்வதனை வாழத்தொடங்கிய வினாடி முதல்,
வழக்கமானது விநோதத் தருணங்கள்;
விந்தையுடன் விழிநோக்கிப் பார்க்கிறேன், வாழ்க்கை பாதையை;
விழுகையில் விரைந்தவர், யாருமில்லை விரல்கொடுக்க,
வீரியமாய் எழுகையில் விதிர்த்தவர் ஏராளம்;
வழிதவறி விழிக்கையில், யாருமில்லை வழிகாட்ட,
விழித்தெழுந்து நடக்கையில் வழிபறித்தோர் பலருண்டு;
விளக்கமின்றி விழைந்தோடி நான் உதவியவர் யாவருமே,
விழிப்புடன் செயலாற்றி என்னை வில்லங்கமாய் வீழ்த்தியவர் தாமே;
வாழ்க்கை,
வேண்டி பெற்ற வரமன்று,
வாசல் வந்த அழைப்பிதழ்.
விரைந்து நீயும் விளித்துப் பார்,
வியக்கும் நின்னை கண்டு இவ்வுலகம் பார்..!!

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!