ஊடல்..!!

உனக்கும் தான் எவ்வளவு திண்ணம்,
ஒவ்வொரு முறை சண்டையிடும் போதும்,
இருசக்கர தேரில், இலகுவாய் அமர்ந்து,
அமர்த்தலாய் எனை அழைத்து செல்கிறாய்,
சமரசம் பேசவென நீ காரணம் மொழிகிறாய்,
மனமிங்கு மௌனமாய் கெக்கலிக்கிறது,
சமாதானத்திற்கும் அவசியமேதினி..!

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!