Posts

Showing posts from September, 2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dadddyyyyyy ❤️❤️❤️

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dadddyyyyyy ❤️❤️❤️ ஒரு பெண் தனக்கு எத்தகு குணம் கொண்ட கணவன் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்தையை கொண்டே முடிவு செய்கிறாள்..! சமையல் முதல் வீட்டு வேலைகள் அனைத்திலும் சரிபாதி பொறுப்பெடுத்து செய்வதில் என் தந்தைக்கு நிகர் அவர் மட்டுமே...! பெண்பிள்ளைகள் மீது தகப்பனுக்கு என்றுமே பாசம் அதிகம், அப்பாவிற்கு எங்களை பெற்றதில் கொஞ்சம் கர்வமும் கூட.. எங்களுக்காக யாரையும் எதற்கும் எதிர்த்து நிற்பார், தேவைபட்டால் விலக்கியும் வைப்பார்... எனக்கான உடையில் இருந்து உணவு வழக்கம் வரை அனைத்திலும் அவரின் தாக்கம் உண்டு... சுதந்திரம் மட்டுமன்றி அதை எத்தனை நேர்த்தியாய் பயன்படுத்த வேண்டும் என்பது வரை ஒற்றை வரியில் உணர்த்தி விடும் கலையை எங்கு தான் பயின்றாரோ..! ஒவ்வொரு விடயத்தையும் அவர் கையாளும் விதமே தனி தான்.. பாலாஜியை பலமுறை பார்த்து பழகி இருக்கிறார், திடீரென ஒரு நாள் இவரை நான் மணமுடிக்க விரும்புகிறேன் என்றதும் ஒரு வினாடி அமைதியின் பின் சரி அழைத்து வா அனைவரும் இரவு உணவுக்கு வெளியே செல்வோம் என்ற ஒற்றை வரியில் சம்மதம் சொல்லும் நேர்த்தி அவருக்கே உரித்தானது.. யாரேனும் அவர...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவிமா ❤️❤️❤️

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவிமா ❤️❤️❤️ ஒவ்வொரு காலகட்டதிலும் ஒவ்வொரு உறவாய், அனைத்திலும் அன்பின் உருவாய் பயணிக்கும் தேவிமா ❤️❤️❤️ ரொம்ப பாசமா உணர்ந்தா இப்படி கூப்பிடுவேன், இல்லனா மம்மி, வாடி, போடி நு இஷ்டம் போல... எனக்கு 5 வயசு அப்போ, என் அம்மா வயத்துல தங்கச்சி 6 மாசம் கால் வலிக்குதா நு, வலிய கேட்டு தூக்கிட்டு போனது இப்பவும் கனவு மாதிரி அடிக்கடி கண்முன்னே வந்துட்டு போகும்... ஆனா அம்மா எவ்ளோ பாசமா இருந்தாலும் அதுல ஒரு கண்டிப்பு இருக்கும், இந்த நாள் வரைக்கும் ஒத்த பார்வைல என்ன சொல்ல வராங்க நு புரிந்து அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகுவேன் என்னையே அறியாம..! தினம் பள்ளிக்கூடம் விட்டதும் நேரா சமயலறைக்கு போய், தேவிமா சோறு ஊட்ட ஊட்ட அன்னைக்கு முழுசும் நடந்த கதை ஒண்ணு விடாம அரைமணி நேரத்துக்கு கதை சொல்லும் வழக்கம், அப்போ தொடங்கி இப்பயும் மாறவில்லை..! எனக்கு சின்ன காயம் பட்டாலும் பெருசா அவ கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டும்.. தோளுக்கு மேல வளந்ததும் நான் தேவிமா-கு பெஸ்ட் பிரண்ட்... என்ன கேட்டு தான் எல்லாம் முடிவும் எடுபாங்க.. எல்லாத்துலயும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.. கல்யாண மண்டபம் க...