இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவிமா ❤️❤️❤️
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவிமா ❤️❤️❤️
ஒவ்வொரு காலகட்டதிலும் ஒவ்வொரு உறவாய், அனைத்திலும் அன்பின் உருவாய் பயணிக்கும் தேவிமா ❤️❤️❤️
ரொம்ப பாசமா உணர்ந்தா இப்படி கூப்பிடுவேன், இல்லனா மம்மி, வாடி, போடி நு இஷ்டம் போல...
எனக்கு 5 வயசு அப்போ, என் அம்மா வயத்துல தங்கச்சி 6 மாசம் கால் வலிக்குதா நு, வலிய கேட்டு தூக்கிட்டு போனது இப்பவும் கனவு மாதிரி அடிக்கடி கண்முன்னே வந்துட்டு போகும்...
ஆனா அம்மா எவ்ளோ பாசமா இருந்தாலும் அதுல ஒரு கண்டிப்பு இருக்கும்,
இந்த நாள் வரைக்கும் ஒத்த பார்வைல என்ன சொல்ல வராங்க நு புரிந்து
அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகுவேன்
என்னையே அறியாம..!
தினம் பள்ளிக்கூடம் விட்டதும் நேரா சமயலறைக்கு போய், தேவிமா சோறு ஊட்ட ஊட்ட அன்னைக்கு முழுசும் நடந்த கதை ஒண்ணு விடாம அரைமணி நேரத்துக்கு கதை சொல்லும் வழக்கம், அப்போ தொடங்கி இப்பயும் மாறவில்லை..!
எனக்கு சின்ன காயம் பட்டாலும் பெருசா அவ கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டும்..
தோளுக்கு மேல வளந்ததும் நான் தேவிமா-கு பெஸ்ட் பிரண்ட்... என்ன கேட்டு தான் எல்லாம் முடிவும் எடுபாங்க.. எல்லாத்துலயும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்..
கல்யாண மண்டபம் கிளம்பும் போது திருவிழாவில் தாயை தொலைத்த பிள்ளை மாதிரி தேவிமா-கு அப்படி ஒரு அழுகை... அந்த நொடி அவள் என் சேயாகிப் போனாள்..! அந்த ஒரு நொடிய பத்திரப்படுத்திக்கிட்டேன் வாழ்க்கை முழுசுக்கும் ❤️❤️❤️
நான் நானாய் இருப்பது உன்னால்,
நீயே என் ஆதியும்,
நீயே என் அந்தமும் ❤️❤️❤️

Comments
Post a Comment