இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dadddyyyyyy ❤️❤️❤️

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dadddyyyyyy ❤️❤️❤️

ஒரு பெண் தனக்கு எத்தகு குணம் கொண்ட கணவன் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்தையை கொண்டே முடிவு செய்கிறாள்..! சமையல் முதல் வீட்டு வேலைகள் அனைத்திலும் சரிபாதி பொறுப்பெடுத்து செய்வதில் என் தந்தைக்கு நிகர் அவர் மட்டுமே...!

பெண்பிள்ளைகள் மீது தகப்பனுக்கு என்றுமே பாசம் அதிகம், அப்பாவிற்கு எங்களை பெற்றதில் கொஞ்சம் கர்வமும் கூட..

எங்களுக்காக யாரையும் எதற்கும் எதிர்த்து நிற்பார், தேவைபட்டால் விலக்கியும் வைப்பார்...

எனக்கான உடையில் இருந்து உணவு வழக்கம் வரை அனைத்திலும் அவரின் தாக்கம் உண்டு...
சுதந்திரம் மட்டுமன்றி அதை எத்தனை நேர்த்தியாய் பயன்படுத்த வேண்டும் என்பது வரை ஒற்றை வரியில் உணர்த்தி விடும் கலையை எங்கு தான் பயின்றாரோ..!

ஒவ்வொரு விடயத்தையும் அவர் கையாளும் விதமே தனி தான்..

பாலாஜியை பலமுறை பார்த்து பழகி இருக்கிறார், திடீரென ஒரு நாள் இவரை நான் மணமுடிக்க விரும்புகிறேன் என்றதும் ஒரு வினாடி அமைதியின் பின் சரி அழைத்து வா அனைவரும் இரவு உணவுக்கு வெளியே செல்வோம் என்ற ஒற்றை வரியில் சம்மதம் சொல்லும் நேர்த்தி அவருக்கே உரித்தானது..

யாரேனும் அவரிடம் ஒரு ஆண் பிள்ளை போல உன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறாய் என்று சொன்னால் சிரித்துக் கொண்டே பெண்பிள்ளைகளை அவர்கள் இயல்பிலேயே வளர்த்திருக்கிறேன் என்ற பதில் வரும்..

அவரை கொண்டே நான் ஆண்மையின் மென்மை அறிந்தேன்,
இன்றும் இன்னலான சமயத்தில் அவரையே அண்டி நிற்கிறேன்..!
நான் என்றுமே அவருக்கு லிட்டில் பிரின்ஸஸ் அல்ல, அவர் கோட்டையின் ராணி ❤️❤️❤️ என்னை முன்னிறுத்தி என்வழி ஆட்சி செய்வதில் என்ன பெருமிதமோ இவருக்கு❤❤❤

#ஆர்த்தி #கிறுக்கல்

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!