Posts

Showing posts from October, 2019

பேரன்பே காதல்❤️❤️❤️

ஒரு நாள் வரும், இதுவரை பொருத்த மனம், புதைத்த காயங்களை ஒருங்கே வெளிக்கொணர்ந்து ஒப்பாரி வைக்கும்.. இதுவரை தாங்கிய அவமானங்களும், கவலைகளும் தன்னை மீறி ஒன்றோடொன்று போட்டிப் போட்டு எது பெரிதென நிரூபித்துக் கொண்டிருக்கும்.. இது நாள் வரை வாய்ப்பும், வாய்தாவும் கொடுத்து வந்த காதல் மனம் மொத்தமாய் தீர்ப்பு வரைந்து மெளனமாய் காத்திருக்கும்... அன்று காதல் புரிந்ததும், அவன் முன் தன் கர்வம் இழந்ததும் எண்ணி இன்று தன்னையே கூண்டில் ஏற்றி கெக்களிக்கும்... செய்த தவறையே மீண்டும் செய்து அதற்காக வேண்டப்படும் மன்னிப்புகள் சூழ்நிலை கருதி செய்யும் சமரசங்கள் அன்றி திருத்தங்கள் அல்ல... உன்னை எப்போது அடுத்தவர் முன் விட்டுத் தருகிறானோ, அன்றே இழக்கிறாய் நீ அவன் மனதின் மரியாதைக்குரிய இடத்தை... உன் கண்ணீர் கண்டு இறங்காதவன், தன் தவறை உணர்ந்து திருந்தாதவன், உன் கவலைக் குறித்து கலங்காதவன், உன் அண்மை தொலைத்து உருகாதவன் உனக்கு ஒருபோதும் உரித்தானவன் அல்ல...! அவனை எண்ணி எங்குவதும், பிரிவை ஏற்க தயங்குவதும் இங்கு நீ ஏற்றுக் கொள்ளும் சிறைவாசம், உன் உணர்விற்கு விதிக்கும் கடுங்காவல் தண்டனை...! பிரிந்து செல்ல தயங்க...

அசுரன் ❤️❤️❤️

மானம் மரியாதைக்காக கொலை பண்ணோம்-நு கௌரவமா சொல்ல மாட்டாங்க இல்லையா மச்சா? என தொடங்கி எத வேணாலும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கலாம் படிப்ப தவிர, ஒரே மொழி பேசுகிறோம் ஒரே நாட்ல வாழ்றோம் இது போதாதா ஒண்ணு சேர எனும் கடைசி வரி வரை ஒவ்வொரு வசனத்திலும் அத்தனை அர்த்தம் இயல்பாய் ஒன்றி வருவது பாராட்டுக்குரியது... தனுஷ் நடிக்கவில்லை,  தன் பிள்ளைக்காக ஊரான் காலில் விழுவதாய் இருந்தாலும் சரி, தொட்டவன் உயிரை எடுப்பதாய் இருந்தாலும் சரி ஒரு அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்... அவன் முன்னாடி அழல மாமா, ஆனா ரொம்ப வலிக்குது மாமா, அடிய விட அங்க இருந்த யாரும் ஒரு கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தது...! என்று மாரியம்மா பேசும் வசனம் நம்மை சுற்றி நடக்கும் தீண்டாமையும், அநியாயங்களையும் தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கும் நம் அனைவருக்கும் செருப்படி..! படத்தில் பார்க்கவே இப்படி இருக்கே இதை தினம் அனுபவிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்..  தன் குடும்பத்திற்காக தன் அசூரத்தனம் அனைத்தையும் அடக்கி ஆளும் அப்பாக்கள் இங்கு எராளம்..! அசுரன்... நமக்குள் புதைந்திருப்பவனை திரையில் பார்த்த திருப்தி ❤️ #ஆர்த்தி #கிறுக்...

தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீனா❤️❤️❤️ தங்கை கொண்ட தமக்கைகள் மட்டும் விரைவில் தாய்மை நிலை அடைந்து விடுகின்றனர்... பிஞ்சு விரல்களுடன், பட்டு ரோசாப்பூ நிறத்தில், ஒரு குட்டி மெழுகு பொம்மை போல் துணியில் சுற்றி கிடந்த அவளை முதன்முறை பார்த்த போது ஏனோ வெறுப்பு மட்டுமே... எந்நேரமும் என்னை மட்டுமே சுற்றி திரிந்த அம்மா இவள் கருவில் தெரிந்த நாள்தொட்டு அன்பையும், பரிவையும் பங்கிட்டதை, அன்றே ஏதோ ஒரு வகையில் மனம் உணர்ந்துள்ளது... நான்கு நாட்கள் நிலைகொள்ளவில்லை அந்த கோபம்... பொக்கை வாய் காட்டி சிரித்து, சின்னஞ்சிறு கையசைத்து, என்னோடு உயிருள்ள உணர்வுள்ள சிறு பொம்மை விளையாடும் போது ஏனோ அந்த குட்டி சிலையை யாரும் தீண்டவும் விடாது காக்கத் துவங்கிவிட்டேன்.. முதல் வாய் சோறு முதல், முதல் நாள் கல்லூரி வரை எங்கும் எதிலும் நானே அவளின் முதல் போக்கிடம்... அம்மா திட்டுவார் என்பதை விடவும் அம்மாவிடம் சென்று அக்கா என்ன செய்வாள் என்பதே அவளின் பெரும் கவலை... பிள்ளையாய், தோழியாய், சகோதரியாய், சில நேரம் தாயாய் என்னோடு பிறப்பு முதல் இந்நாள் வரை உடனிருக்கும் தேவதையாய், என்றும் எதிலும் நான் பெறாமல் பெற்ற முதற்...

என்னுள் கலந்த தமிழே..!

மறக்க முடியா உயிர் நீ, மறுக்க இயலா மெய் நீ, தடுக்க முடியா வல்லினம் நீ, தவிர்க்க முடியா மெல்லினம் நீ விலக்க முடியா இடையினம் நீ..! என் அமுதே, என்னுள் கலந்த தமிழே, உனையன்றி வேறு மொழி அறியேன் நான் ❤️❤️❤️