தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீனா❤️❤️❤️
தங்கை கொண்ட தமக்கைகள் மட்டும் விரைவில் தாய்மை நிலை அடைந்து விடுகின்றனர்...

பிஞ்சு விரல்களுடன், பட்டு ரோசாப்பூ நிறத்தில், ஒரு குட்டி மெழுகு பொம்மை போல் துணியில் சுற்றி கிடந்த அவளை முதன்முறை பார்த்த போது ஏனோ வெறுப்பு மட்டுமே...

எந்நேரமும் என்னை மட்டுமே சுற்றி திரிந்த அம்மா இவள் கருவில் தெரிந்த நாள்தொட்டு அன்பையும், பரிவையும் பங்கிட்டதை, அன்றே ஏதோ ஒரு வகையில் மனம் உணர்ந்துள்ளது...

நான்கு நாட்கள் நிலைகொள்ளவில்லை அந்த கோபம்... பொக்கை வாய் காட்டி சிரித்து, சின்னஞ்சிறு கையசைத்து, என்னோடு உயிருள்ள உணர்வுள்ள சிறு பொம்மை விளையாடும் போது ஏனோ அந்த குட்டி சிலையை யாரும் தீண்டவும் விடாது காக்கத் துவங்கிவிட்டேன்..

முதல் வாய் சோறு முதல், முதல் நாள் கல்லூரி வரை எங்கும் எதிலும் நானே அவளின் முதல் போக்கிடம்... அம்மா திட்டுவார் என்பதை விடவும் அம்மாவிடம் சென்று அக்கா என்ன செய்வாள் என்பதே அவளின் பெரும் கவலை...

பிள்ளையாய், தோழியாய், சகோதரியாய், சில நேரம் தாயாய் என்னோடு பிறப்பு முதல் இந்நாள் வரை உடனிருக்கும் தேவதையாய், என்றும் எதிலும் நான் பெறாமல் பெற்ற முதற்புதல்வி அவளே ❤️❤️❤️

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீனா ❤️❤️❤️
#ஆர்த்தி #கிறுக்கல்

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!