அன்பு

அன்பு,
          யாரையும் எளிதில் ஈர்த்துவிடும்,
                விழிகள் கண்டு பேசும் போதே 
          விந்தைகள் பல மனதில் புரிந்து
                 வார்த்தைகளை விளக்கி,
          விழியே வெளிபடுதிவிடும் நம் கருத்துக்களை!!!
                  
           கைகளை கோர்த்து நடக்கும் போது 
                   சத்தமில்லாமல் சத்தியம் செய்கிறாய் 
           நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று !!!

           காணத் துடிக்கும் கண்கள் கண்ணியத்துடன் கூறுகின்றது 
                    காலம் கடந்து நிற்கும் என் அன்பு உன் மீது என்று !!!

           என்னால் ஒருவரை மகிழ்விக்க முடியும் என்பதை 
                     எனக்கு உணர்த்தியதே நீதானே !!!

           துன்ப காலத்தில் துணையாய் நின்றாய் 
           என் இன்பம் கண்டு உன் துன்பம் மறந்தாய்
           தனிமையில் மூழ்கும் தருணம் ஒவ்வொன்றிலும் 
           உன் தோள் தந்து தனிமையிலிருந்து மீட்டாய் என்னை !!!

           என் கனவுகளை காட்சிகளாக்கினாய்
                    சில நேரம் கண்களை குளமாக்கினாய் ,
           காயபடுத்தி அல்ல,
                     என் காயத்தை போக்கி !!!
         உன் அன்பில் சிறை பிடித்த எனக்கு 
                    என்றுமே விடுதலை தந்து விடாதே!!!
                                                             
         என்றும் உன் அன்புச் சிறையில் அடைப்பட்டிருக்கும்..!

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!