முதன்முறையாக !!!

                                   
முதன்முறையாக !!!

காலை கதிரவன் மறையும் கணம்,
மாலை நிலா மறையக் கண்டேன்!
சாலையோர பூக்கள் விரியக் கண்டேன்,
பட்டெனத் தெறிக்கும் பனித்துளிக் கண்டேன்,
பேருந்துப் பயணத்தில் அமைதியை உணர்ந்தேன்!!!

முதன்முறையாக!!!

பாடிப் பறக்கும் பறவைகள் கண்டேன்,
சிரித்து உண்ணும் சிட்டுகள் கண்டேன்,
சிலிர்க்க வைக்கும் தென்றலில் சிணுங்கி நின்றேன்,
பயணம் முழுதும் பரவசம் கண்டேன்,
பாறையில் கூட நீர் கசியக் கண்டேன்!!!!

முதன்முறையாக !!!

மாந்தோப்பு நிழலில் அயர்ந்து நிற்கிறேன்,
மகிழம்பூ மணத்தில் என்னை மறந்து நிற்கிறேன்,
எழில்மிகு வனத்தில் எட்டிப் பறக்கிறேன்,
மலைகளின் நடுவே சுற்றித் திரிகிறேன் !!!

முதன்முறையாக !!!

தனிமையில் இயற்கையின் அழகை ரசிக்கிறேன்,
விரும்பிய தூரம் பயமின்றி பயணிக்கிறேன்,
செல்லும் வழியெல்லாம் வியந்து நிற்கிறேன்,
தெருவோர சிறார்களோடு விளையாடி மகிழ்கிறேன் !!!!

முதன்முறையாக !!!

அடக்க ஆளின்றி ஆனந்தமாய் திரிகிறேன்,
அடக்கிய ஆசைகளை நிறைவேற்றி ரசிக்கிறேன்,
ஆடி முடித்து களைக்கும் நேரம்,
இயற்கை அன்னையின் மடியில் துயில்கிறேன்!!!



 எனது பயணப் பதிவு - ஆழியார் !!!!

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

இன்று ஒரு இரவு.!