Posts

Showing posts from February, 2013

யோசிங்க..!!!

Image
நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஆசானை அருகில் வைத்திருக்கிறோம் அவர்களிடம் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு என்னை செதுக்கிய ஒரு மனிதரிடம் சில மணித்துளிகள் நேரில் கழிக்க நேரிட்டது. உண்மையா சொல்லனும்னா என் வாழ்க்கைல ஆச்சர்யம் நிறைந்த சில மணிநேரம் அதுதான்.  உலகத்துல எத்தனையோ பேர் இருந்தும் ஏன் யாருமே சில விஷயங்கள்  யோசிக்கிறதே இல்ல இப்படி ஒரு சிறிய கேள்வி தான் ஆரம்பிச்சுது அதுக்கு என் வகுப்பு கடைசி இருக்கை மாணவன்ல தொடங்கி ஐன்ஸ்டீன் வரைக்கும் பேசிட்டாரு நம்ம பாஸ். அப்படி என்னதான் பேசினார்னு கேக்க ஆவலா  இருக்குல..? அவரு பேசும் போது எங்களுக்கும் இதே ஆவல் தான். இதோ நம்முடன் பாஸ்.....                                ஐன்ஸ்டீன் பத்தி எல்லாருக்கும் தெரியும். அறிவியல்,  தொழில்நுட்பம் இத பத்தி எல்லாம் பேசுறவங்களுக்கு முதல்ல ஞாபகம் வர பேரு "ஐன்ஸ்டீன்". இது மறுக்க முடியாத உண்மை. இந்த ஐன்ஸ்டீன் பள்ளிக்கூடத்துல படிக்கும் போது மக்கு சாம்பிர...

இரயில் பயணம்....!!!

Image
கண்ணயர்ந்து உறங்கவே ஆயத்தமானேன் முந்தைய இரவு உறங்கிய களைப்பில். உறுதிசெய்யப்படாத பயணச்சீட்டு விழிக்க வைத்துவிட்டது. செய்வதறியாமல் இருந்த சில நிமிடங்களில் என் கைகளில் "இறையன்பு "  எழுதிய "வேடிக்கை மனிதர்கள்". மனிதர்கள் வேடிக்கையானவர்கள் மட்டுமல்ல விசித்திரமானவர்களும் கூட..!! மனிதர்களை பற்றி மனதில் எழுந்த சில கேள்விகள் ..!! உலகின் உயர்ந்த பிறவி, மனிதபிறவி ..!! ஆறறிவு படைத்த ஓரினம் அதில் ஒன்றைக்கூட உபயோகிக்காதது ஏன் ..? உணவின் ருசி அறியாதவனுக்கு பசியின் பொருள் தெரியாததேன் ..? தன் மகிழ்ச்சியை மதிக்க தெரிந்தவன் பிறருக்கு மனமென்று ஒன்று இருப்பதையே மறுப்பதேன் ..? சிலர் பளபளக்கும் பொருளுக்கு பலகோடி கொடுக்க பல்லாயிரம் மக்களை தெருக்கோடியில் தள்ளுவதேனோ...? ஈனப் பிறவியென கருதும் பல இனங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை மனிதப்பிறவிக்கு மணியளவேனும் இல்லாததேனோ ..? தன் சுகமென்று வாழ்வதற்கு தானோ மனி(தன்) என்று பெயர் ..? வேடிக்கையை ரசிக்கத் தெரியாதவர்களாய் இருந்தவர்கள் இன்று வேடிக்கை மனிதர்களாய் மாறிவிட்டோம் ...!!! சிரிக்கத் தெரிந்த ஓருயிர் இன்று சிரித்து...

உங்களுள் ஒருவள் என்ற செருக்கில் ..!!!!

Image
சில நேரம் வாழ்க்கை வெகு விரைவில் நகர்ந்து விடுவதாக உணர்கிறோம். நம் பிரியமானவர்களிடம் கூட நேரம் ஒதுக்க முடியாமல் போய்  விடும். அத்தகைய சில நாட்கள் என் வாழ்விலும். அந்த சூழலில் மனதில் உதித்த சில வரிகள்...!!!! செதுக்கி வைக்க இயலாதோ  இந்த நேரத்தை..? சில வினாடிகளேனும்  செல்லமாய் சண்டையிடும்  தருணத்தை அல்லவோ இழந்துவிட்டேன்? கல்லூரி நாட்களின்  இனிமையை கொண்டாடிட  சில தினங்களே மிஞ்சியுள்ள  இவ்விறுதியாண்டில்  தொலைத்து விட்டேன்  கிடைத்தற்கரிய பொக்கிஷத்தை..!!! மாலை நேரத்தில்  நானுன்னை பார்த்தபோதும்  கண்டும் காணாமல் சென்றுவிட்டேன்  அரைவினாடியே என நினைத்து நான் நின்றாலும்  உன்னுடன் பலமணி நேரமும்  சிலவினாடிகளாய் கழிந்துவிடும்  என்பதை மனம் முன்பே அறிந்திருந்ததால் ..!!! கோபப்பட்டு நீ விலகினாலும்  கோபம் தணியும் வரை காத்திருப்பேனே அன்றி  ஒரு நாளேனும் நிறுத்த மாட்டேன்  உன்னுடன் வம்பிழுத்து மகிழ்வதை  ஏனெனில், உன்மீது  எனக்குள்ள உரிமையை...