இரயில் பயணம்....!!!

கண்ணயர்ந்து உறங்கவே ஆயத்தமானேன் முந்தைய இரவு உறங்கிய களைப்பில். உறுதிசெய்யப்படாத பயணச்சீட்டு விழிக்க வைத்துவிட்டது. செய்வதறியாமல் இருந்த சில நிமிடங்களில் என் கைகளில் "இறையன்பு "  எழுதிய "வேடிக்கை மனிதர்கள்".

மனிதர்கள் வேடிக்கையானவர்கள் மட்டுமல்ல விசித்திரமானவர்களும் கூட..!!

மனிதர்களை பற்றி மனதில் எழுந்த சில கேள்விகள் ..!!



உலகின் உயர்ந்த பிறவி, மனிதபிறவி ..!!

ஆறறிவு படைத்த ஓரினம்
அதில் ஒன்றைக்கூட உபயோகிக்காதது ஏன் ..?

உணவின் ருசி அறியாதவனுக்கு
பசியின் பொருள் தெரியாததேன் ..?

தன் மகிழ்ச்சியை மதிக்க தெரிந்தவன்
பிறருக்கு மனமென்று ஒன்று இருப்பதையே மறுப்பதேன் ..?

சிலர் பளபளக்கும் பொருளுக்கு பலகோடி கொடுக்க
பல்லாயிரம் மக்களை தெருக்கோடியில் தள்ளுவதேனோ...?

ஈனப் பிறவியென கருதும் பல இனங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை
மனிதப்பிறவிக்கு மணியளவேனும் இல்லாததேனோ ..?

தன் சுகமென்று வாழ்வதற்கு தானோ
மனி(தன்) என்று பெயர் ..?

வேடிக்கையை ரசிக்கத் தெரியாதவர்களாய் இருந்தவர்கள்
இன்று வேடிக்கை மனிதர்களாய் மாறிவிட்டோம் ...!!!

சிரிக்கத் தெரிந்த ஓருயிர்
இன்று சிரித்துக் கொண்டிருக்கின்றது
சிலரின் சிரிப்புக்காக
பலரின் சிரிப்பை மட்டுமல்ல
தன் சிறப்பையும் அழித்து...!!!

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!