யோசிங்க..!!!
நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஆசானை அருகில் வைத்திருக்கிறோம் அவர்களிடம் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு என்னை செதுக்கிய ஒரு மனிதரிடம் சில மணித்துளிகள் நேரில் கழிக்க நேரிட்டது.
உண்மையா சொல்லனும்னா என் வாழ்க்கைல ஆச்சர்யம் நிறைந்த சில மணிநேரம் அதுதான்.
உலகத்துல எத்தனையோ பேர் இருந்தும் ஏன் யாருமே சில விஷயங்கள் யோசிக்கிறதே இல்ல இப்படி ஒரு சிறிய கேள்வி தான் ஆரம்பிச்சுது அதுக்கு என் வகுப்பு கடைசி இருக்கை மாணவன்ல தொடங்கி ஐன்ஸ்டீன் வரைக்கும் பேசிட்டாரு நம்ம பாஸ். அப்படி என்னதான் பேசினார்னு கேக்க ஆவலா இருக்குல..? அவரு பேசும் போது எங்களுக்கும் இதே ஆவல் தான்.
இதோ நம்முடன் பாஸ்.....
ஐன்ஸ்டீன் பத்தி எல்லாருக்கும் தெரியும். அறிவியல், தொழில்நுட்பம் இத பத்தி எல்லாம் பேசுறவங்களுக்கு முதல்ல ஞாபகம் வர பேரு "ஐன்ஸ்டீன்". இது மறுக்க முடியாத உண்மை. இந்த ஐன்ஸ்டீன் பள்ளிக்கூடத்துல படிக்கும் போது மக்கு சாம்பிராணினு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க ... ஆனா அது 100 % உண்மை.
பள்ளிகூடத்துல படிக்கும்போது தினமும் வாத்தியர்க்கிட்ட நீ படிக்கவே மாட்ட உருப்புடாம தன போக போறன்னு சதா வாங்கிட்டே இருந்த ஐன்ஸ்டீன் எப்படி இவ்ளோ பெரிய அறிவியல் மேதை ஆனார்னு கேக்குறீங்கள...? அதுக்கு காரணம் இது தான்...
மனிதனோட ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்குறது மூளை தான் ஆனா எந்தெந்த செயல மூளையின் எந்த பகுதி கட்டுபடுத்துது னு நாம தெளிவா யோசிச்சு இருந்தா இந்த கேள்விக்கு விடை ரொம்ப சுலபமா கெடச்சுடும்....
ஆமாங்க..! நம்ம மூளைய வலப்புறம் இடப்புறம்-னு இரு வகையா பிரிக்கலாம் இதுல இடப்புற மூளை பிறரோட கட்டளைகள அல்லது மத்தவங்க என்ன சொன்னாலும் அத பத்தி தெளிவா அப்படியே செய்யும் ஆனா நம்ம வலப்புற மூளை எந்த ஒரு செயலையும் புதுமையா அதே சமயம் சுயமா யோசிச்சு முடிவெடுக்கும். ஆனா நாம எல்லாரும் நம்மோட இடப்புற மூளைய உபயோகப்படுத்துற மாதிரி தான் நம்மோட பாடத்திட்டங்களும் அமைக்கப்பட்டு இருக்கு ...
இப்ப தெளிவா புரிஞ்சு இருக்குமே... ஐன்ஸ்டீன் ஏன் அப்படி இருக்காரு நாம ஏன் இப்படி இருக்கோம் னு.. இது நம்ம தப்பு இல்லைங்க...!!!
யோசிங்க..!!!
பாஸ் வார்த்தைகள் ... தொடரும் ..!!!
Comments
Post a Comment