உங்களுள் ஒருவள் என்ற செருக்கில் ..!!!!
சில நேரம் வாழ்க்கை வெகு விரைவில் நகர்ந்து விடுவதாக உணர்கிறோம். நம் பிரியமானவர்களிடம் கூட நேரம் ஒதுக்க முடியாமல் போய் விடும். அத்தகைய சில நாட்கள் என் வாழ்விலும். அந்த சூழலில் மனதில் உதித்த சில வரிகள்...!!!!
செதுக்கி வைக்க இயலாதோ
இந்த நேரத்தை..?
சில வினாடிகளேனும்
செல்லமாய் சண்டையிடும்
தருணத்தை அல்லவோ இழந்துவிட்டேன்?
கல்லூரி நாட்களின்
இனிமையை கொண்டாடிட
சில தினங்களே மிஞ்சியுள்ள
இவ்விறுதியாண்டில்
தொலைத்து விட்டேன்
கிடைத்தற்கரிய பொக்கிஷத்தை..!!!
மாலை நேரத்தில்
நானுன்னை பார்த்தபோதும்
கண்டும் காணாமல் சென்றுவிட்டேன்
அரைவினாடியே என நினைத்து நான் நின்றாலும்
உன்னுடன் பலமணி நேரமும்
சிலவினாடிகளாய் கழிந்துவிடும்
என்பதை மனம் முன்பே அறிந்திருந்ததால் ..!!!
கோபப்பட்டு நீ விலகினாலும்
கோபம் தணியும் வரை காத்திருப்பேனே அன்றி
ஒரு நாளேனும் நிறுத்த மாட்டேன்
உன்னுடன் வம்பிழுத்து மகிழ்வதை
ஏனெனில்,
உன்மீது
எனக்குள்ள உரிமையை
எப்படி காட்டுவேன்
மமதையுடன் ஊருக்கு...??
சில நேரம் காயபடுத்தினாலும்
ஒருபோதும் மனதார நினைத்ததில்லை
என்றும் செருக்குடன்
சொல்லவே விரும்புகிறேன்
உங்களுள் ஒருவள் நான் என்று...!!!!
என்றும் மறக்கவும் வெறுக்கவும் இழக்கவும் விரும்பாத சிலருக்காக...!!!!
ஆர்த்தி...!!!
ஆர்த்தி...!!!
nice arathi
ReplyDeleteSuperb darling...
ReplyDeleteMissing you... :'(
friends forever....
ReplyDelete