வாழ்வியல்....!!!
இயற்கை விவசாயம் என்பது நம் வாழ்வியல் முறை . சுய சார்பற்ற வாழ்க்கை வாழ இயற்கை விவசாயம் ஒன்றே வழியாகும் . மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு , உடை , பாதுகாப்பான வீடு ஆகிய அனைத்தும் இயற்கை விவசாயம் மூலம் அடையலாம் . இவை மட்டுமல்லாமல் இன்றைய முக்கிய தேவையான காகிதத்தால் ஆன பணமும் சாத்தியமே . இத்தகைய முறையை நாம் ஏன் பின்பற்றுவதில்லை ? இந்த கேள்விக்கு விடை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நிச்சயம் வானகத்தில் கிடைக்கும் . அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் , எல்லா கவலைகளையும் மறந்து ஐந்து நாள் வானகம் எனும் சொர்கத்தில் பயிற்சி பெறுவது மட்டுமே . இயற்கை வேளாண்மை என்றதும் விவசாயகள் மட்டுமே பங்குபெறும் ஒரு பயிற்சி கூடமாக இருக்கும் என்று சென்றிருந்த எங்களுக்கு மிஞ்சியது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் தான் . கணினித் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து கிட்டதட்ட ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கிடைக்கும் சமயத்தில் தனக்கு இத்தகைய வேலை தேவை இல்லை என்று கூறி விட்டு இயற்...