உயிர்வேலி..!!!
என்னடா…!!! என்
தாய் எவ்வித தடங்கலும் இல்லாமல் என்னை ஐந்து நாள் பயிற்சிக்காக கரூர் வரை அனுப்புகிறாரே என்ற வியப்புடன் தான் எனது தாயுடன் இரயில் நிலையம் நோக்கி பயணித்தேன். சென்றதும் தான் தெரிந்தது எனது நேரம் அங்கு தான் ஆரம்பமாகின்றது என்று.
ஆம்..!! சென்னை
மக்கள் அனைவரும் அன்று தான் கோவை செல்ல வேண்டும் என முடிவெடித்து இருப்பார்கள் போலும். அதிகாரியை பார்த்து எப்படியாவது பயணச்சீட்டை உறுதி செய்து வேண்டும் என்ற உறுதியுடன் சென்ற எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே..!!!
என் தாயின் கவலை அத்தருணமே தொடங்கிவிட்டது. என்னை சற்று கடுமையாகவே
திட்டி விட்டு கண்ணீருடன் அவ்விடத்தை விட்டு சென்று விட்டார். பின்ன என்ன செய்வார்.? நிற்க கூட இடமில்லாமல் படியில் தொங்கிக்கொண்டு அல்லவா பயணித்தேன். என் தாயின் அன்பு புரிந்தாலும் இளம் இரத்தமல்லவா அவரை சத்தமில்லாமல் மனதில் கோவிக்கவே செய்தது. எப்படியோ இருக்கைக்கு மேலே தொற்றிக் கொள்ள இடம் கிடைத்ததால் ஒருமணி நேரத்திற்க்குள் சிரமம் சற்றே குறைந்தது.
5.30
மணிக்கு வந்த ஒரு கைப்பேசி அழைப்பு என்னை சற்றே ஆடச் செய்தது. என்னை அழைத்து செல்வதற்காக என் தோழன் 2 மணி நேரத்திற்க்கு முன்பே வந்து எனக்காக காத்து கொண்டிருக்கின்றான் என்ற செய்தி அதிர வைக்கத்தானே செய்யும். ஒரு வழியாக நண்பனை கண்டது மட்டுமல்லாமல் உணவு அருந்தி விட்டு கரூர் செல்லும் பேருந்தில் ஏறி நண்பன் இல்லத்தையும் அடைந்தாயிற்று.
எங்களை அழைத்துச் செல்ல என் தோழர்கள் இருவர் பேருந்து நிலையம் வந்திருந்தனர். வாகனத்திலேயே தொடங்கி விட்டது எங்களது ஆட்டம். எங்களை நன்றாக புரிந்துக் கொண்ட நண்பரின் பெற்றோர்களும் மாடியில் எங்களுக்கு இடத்தை ஒதுக்கி விட்டனர்.
அப்புறம் என்ன? நண்பர்கள் ஐந்து பேர் ஒன்று சேர்ந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமா.? நள்ளிரவு மணி 2 ஆயிற்று. அசதியில் எங்களையே அறியாமல் நாங்கள் உறங்கிப்போக. என் வாழ்வின் மறக்க முடியாத இரவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இரவு. அன்று..!! நண்பர்களை பல தருணங்களில் தேடிச் சென்றுள்ளேன். இச்சமயம் என்னுடன் இருக்கும் இம்மூவரும் என் வாழ்வில் எந்நேரமும் என்னை விட்டு பிரியப்போவதில்லை என்பதில் எனக்கு கடுகளவும் ஐயமில்லை..!!
அட,
நாங்கள் ஐவரும் எதற்க்காக கரூர் சென்றோம் என்பதையே கூற மறந்துவிட்டேனே…..?
ம்ம்ம்ம்..
சரி நாளை வரை தான் காத்து இருங்களேன் அதை அறிந்துக்கொள்ள..!!!
பயணம்
தொடரும்…!!!!
Comments
Post a Comment