யார் சொன்னது?

உனக்கு யார் சொன்னது.?
என்னை நீ தீண்டி சென்றதும்,
உள்ளுக்குள் ஓராயிரம் பட்டாம்பூச்சி,
ஒருசேர பறந்தது போல்,
சிலிர்த்து நின்றேன் நானென்று..!

என் வேப்பந்தனை நீ உணர்ந்து,
என் கரங்கள் உன் கைகோர்த்து,
நாம் உமிழ்நீர்தனை கலந்திட்ட,
சிறுநொடியில் என்னை இழந்திட்ட,
நிமிடங்களை உனக்கு யார் சொன்னது?

இமை மூடி சிரித்திருந்தேன்,
இதழ் சேர துடித்திருந்தேன்,
இதயம்தனில் உன்னை தைத்திருந்தேன்,
இருவிழி மூடாது உன்னை ரசித்திருந்தேன்,
யாரும் சொல்லவில்லையே இதையுனக்கு.?

ரத்தம்தனில் இளஞ்சூடு,
சத்தம்தனில் வெளிப்பாடு,
சந்தம்தனில் லயித்திருந்த,
அந்த சிறுமுத்தம் சொல்லுமுனக்கு,
சிந்தித்து நான் சொல்லாத பலகதைகளை..!!

Comments

Popular posts from this blog

Perks of turning 25...!

பிக் பாஸ் - கற்றதும் பெற்றதும்

அறிமுகம்...!!